ஞாயிறு, 26 ஜூன், 2011

நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம்

பத்தினித் தெய்வமான சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த இடமான அசேவனம்.அந்த அசோக வனம் நுவரேலியா நகரிலிருந்து பணடாரவளை செல்லும் வீதியில் சித்தாஎலிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம்






சீதை தனக்கு எற்பட்ட நிலை வேறுயாருக்கும் நடக்கு கூடாது என்று அருள் பாலிக்கும் ஆலயம் தான் சீதா எலிய ஆலயம். எனக்கூறப்படும் சீதா எலிய கோயிலை தரிசிக்கச் சென்றோம். சிறிய இக் கோவில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும். நீண்டு உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது



சீதா அம்மனுக்கு உலகில் உள்ள ஒரே கோயில் இதுதான். முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு அருவியின் சலசலக்கும் சத்தம்இ குளிர், காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் மூலஸ்தான தரிசனம் என யாவும் சேர்ந்து








அகமுகமும் குளிர அத்துணை இனிய அனுபவம் கிடைக்கப் பெறுகிறது கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்ல வேண்டும். வழமையாக மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று அனுபவப்பட்ட எங்களுக்கு இது புதுமையாக இருந்தது.

கோயிலிருந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் அருவி வரும். இந்த அருவியில்தான் இராவணனால் அசோக வனத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு இருந்த சீதை தினமும் நிராடி செல்வதாம்.

அந்த அருவி நீரில் நாங்கள் மனதில் ஒரு காரியத்தை நினைத்து பூ எறியும் போது பூ வானது கிழ் உள்ள ஆற்றுடன் போய் சேருமாகவிருந்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அருவியில் தடங்கி நிக்குமானால் நினைத்த காரியம் நிறைவேறாதாம்





நானும் பூ வெறிவதற்கு பூ தோடினாற் கிடையது சரி ஒருவாறு சிதாப்பிராட்டிக்கு வைக்கபட்டிருந்த பூவை நீரோடையில் எறிந்தேன் சரியாக அது ஆற்றை வேகமாக சென்றடைந்தது . நானே மனதில் எதும் நினைக்கவில்லை . எதாவது நினைத்திருக்கலாம் என்று நினைத்தக்கொண்டு கைகள் தானாகவே கூப்பி வணங்கி நிற்கின்றன. ஸ்தான மூர்த்திகளைச் சுற்றி வந்தால் கோயில் பின்புறம் அடைத்த தடுப்புக் கம்பிகள் ஊடே ஓடும் ஆறு சலசலத்து முதலில் அழைக்கிறது.

அது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் சுற்றி வர மஞ்சள் நிறத்தை வட்டமாக அடித்துக் காட்டியுள்ளார்கள். அதன் அருகே ஆற்று நீர் அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் இடது மூலையில் பாதம் பதித்த இடத்தைப் பார்த்தவாறே அனுமார் மூலஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரை வணங்கிவிட்டு இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அவர் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும். வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறி வந்தோம்.

அனுமார் சந்நிதியைச் சுற்றி வணங்கினோம். நாங்கள் சென்ற நேரம் பூசை முடியும் நேரம் ஆதலால் விபூதி குங்குமம் வழங்கினார்கள். திரும்பிப் பார்த்த போது அனுமருக்கு துணையிருக்க வந்துவிட்டார்கள் பலர். பயமற்று பக்தர்களிடையே வீரநடையில் ஓடித்திரிந்தனர்.


இராமன் சீதா கல்யாணம் காடேறல் பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல் பரதன் பாதரட்சை பெறுதல் புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல் மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.





தீயிட்ட வாலுடன் அனுமர் திரும்பிச் சென்ற மலை கறுத்த மரங்கள் கொண்டதாகவே காணப்படுகிறது. அதுமட்டுமல்ல நிலமும் கறுப்பாக தான் இருக்கும் என்றார் ஆலய பூசகர் நாமும் சென்று பார்க முடிவு செய்து ஆலயத்திற்கு பின்னால் இருக்கும் அருவியை கடந்து பின்னால் இருக்கும் மலையின் அடிவாரத்தில் நின்று பார்த்தோம் சுற்றிலும் நிலம் நேற்று எரிக்கப்பட்ட பிரதேசம் போல காட்சியளித்தது நினைக்கவே ஆச்சரியாமாகவிருந்தது.

இவ்வாலயத்திற்கு வடக்கே ஓரு மலை அனுமாரினது முகவடிவில் காணப்படுகின்றது . அங்கிருந்த தான் சீதை நிராட வருவதை கண்ட அனுமார் அவதானித்து அந்த மலையிலிருந்து ஒரு சுரங்க பாதை யுள்ளதாம் இந்த அசோக வனத்திற்கு வருவதற்கு தற்போது முடப்பட்டுள்ளதாம்.



அழகிய சீதை ஆலயத்தை முன்பும் இரு தடவைகள் தரிசித்து இருந்தாலும் இயற்கையுடன் சேர்ந்த கோயிலின் வடிவ அமைப்பு மீண்டும் மீண்டும் சென்று தரிசிக்கத் தூண்டுகிறது.

இதிகாச கதையிலிருந்து ஒரு பகுதி சுருக்கம்

ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம் உண்டு. சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம் நிகழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள் (அவ்வூரில் வழங்கப்படும் பெயர்களால்) குறித்து அறிவோமா?!
வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது. ராவண கோட்டே: ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை இது. சீதா தேவி இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தாள். சீதா கோட்டுவா: சீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந் ததாகக் கூறுவர்.அசோக் வாடிகா: சீதையைத் தேடி ஸ்ரீராமன் வருகிறான் என்பதை அறிந்த ராவணன், சீதா கோட்டுவாவில் இருந்த சீதாதேவியை ரதத்தில் ஏற்றி, இந்த இடத்துக்கு அழைத்து வந்து சிறை வைத்தானாம். சீதா கோட்டுவாவில் இருந்து அசோக் வாடிகா செல்லும் வழியில், ராவணனின் ரதம் சென்ற பாதையையும் அசோக் வாடிகாவில் சீதையின் கோயிலையும் காணலாம்.ராவணகோடா: சீதாதேவியை பல இடங்களில் ராவணன் மறைத்து வைத்திருந்தானாம். அப்படியரு மலைக் குகையையும் அதற்கான பாதையையும் உள்ளடக்கிய பகுதியே இந்த ராவணகோடா. சீதாதேவி சிறை வைக்கப் பட்ட வேறு சில இடங்கள்: நுவரேலியா அருகிலுள்ள சீத்த எலியா மற்றும் இஸ்திரீபுரா.ஸ்திரீபுரா: 100 மீட்டர் நீளமுள்ள குகைகளுடன் கூடிய மலைப் பகுதி. சீதைக்குக் காவலாக பெண்கள் பலரை ராவணன் நியமித்த இடம் இது.
சீதை கண்ணீர்க் குளம்: கணவனைப் பிரிந்த துக்கத்தில் சீதாதேவி சிந்திய கண்ணீரில் உருவான குளத்தையே கண்ணீர்க் குளம் என்கிறார்கள். இந்தக் குளத்துக்குச் செல்லும் வழி நெடுகிலும் பூத்துக் குலுங்கும் மலர்களை 'சீதை பூக்கள்' என்கிறார்கள்!கொண்ட கலை: ராவணன் தன்னைக் கடத்தி வந்தபோது, தான் செல்லும் திசையை அடையாளம் காட்டுவதற்காக... சீதாதேவி, இந்த இடத்தில் தன் அணிகலன்கள் சிலவற்றை விட்டுச் சென்றாளாம்.சீதா கூலி:கடத்தி வரும் வழியில், ராவணன் தனக்கு உண்ணக் கொடுத்த அரிசி உருண்டையைத் தூர எறிந் தாள் சீதா. அந்த உருண்டை சிதறி விழுந்த இடம்.மாலிகா தென்னா வெளி மாடா: ராவணனின் அரண்மனை அமைந்திருந்த இடம் என்கிறார்கள். தற்போது விவசாய பூமியாக காட்சி தருகிறது (அரண்மனை, கடலில் மூழ்கி விட்டதாம்!).உஷஸ்கோடா: ஸ்ரீஅனுமனது வாலில் நெருப்பு வைக்கப் பட்ட இடம். இலங்கையில் நீலாவாரி (பஞ்சமுக அனுமன்) மற்றும் இரட்டோட்டா (பக்த அனுமன்) ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன. இலங்கையில் இரட்டோட்டா எனும் இடத்தில் மட்டுமே ஸ்ரீராமனின் பெயரில் கோயில் அமைந்துள்ளது. நீலாவரி: தன்னுடன் இலங்கைக்கு வந்த வீரர்களது தண்ணீர் தாகத்தைத் தீர்க்க, ஸ்ரீராமன் தனது அஸ்திரத்தை ஏவி உருவாக்கிய திருக்குளம் இது.யுத்த கணவா: ராம- ராவண யுத்தம் நிகழ்ந்த இடம். ராவண சேனைகளுக்கும் வானரர்களுக்குமான யுத்தத்தின் பெரும்பகுதி, 'வாஸ்காமுவா' எனும் இடத்தில் நிகழ்ந்த தாம். யுத்தம் நிகழ்ந்த வேறு இடங்கள்: துணுவிலா, எலக்கே, லக்சுலா. இந்தப் பகுதிகளில் வெறும் புற்கள் மட்டுமே விளைகின்றன.கன்னியா: ராவணன், தன் தாயாருக்கு இறுதிக் கடன் ஆற்றிய இடம்.உனவாதுவா: அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் சிதறல்கள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று. மற்றவை: ருமஸ்ஸலா, தொலுகண்டா, ரிட்டிகலா, தைலடி, அட்சத்தீவு ஆகிய இடங்களாகும். உனவாதுவா என்றால், 'அங்கே அது விழுந்தது' என்று பொருள்! மூலிகைகள் நிறைந்த பகுதி இது. யகங்சுலா:ராவணனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி! இங்குள்ள 'திவன்' எனும் பாறையில்தான் அவனது
உடலை அடக்கம் செய்தாகவும், இலங்கையின் மன்னன் என்பதால், ராவணனின் உடலுக்கு ஸ்ரீராமன் மரியாதை செலுத்தினார் என்றும் கூறுவர்.திவிரும்போலா:சீதாதேவி, தனது கற்பின் மாண்பை உலகுக்கு உணர்த்த தீக்குளித்து மீண்ட இடம்.வந்தாரமுலே: வெற்றிக்குப் பிறகு, சீதாதேவியுடன் ஸ்ரீராமன் ஓய்வெடுத்த இடம். இங்குதான் அவர்கள் தங்களது மண வாழ்க்கையை மீண்டும் துவங்கினர் என்றும் கூறுவர்.அமரந்த கலி: போருக்குப் பின் ஸ்ரீராமரும் சீதையும் உணவு அருந்திய இடம் இது! முன்னீஸ்வரம்: ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளான ஸ்ரீராமன், இலங்கையில் உள்ள முன்னீஸ்வரம் சிவபெருமானை வழிபட்டாராம். அத்து டன் நான்கு இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தும் பூஜித்தாராம். அந்த இடங்கள்: மணவாரி, கோகலிங்கம், திருச்சேதிஸ்வரம்



கருத்துக்கள் எழுத்து பிழையிருந்தால் சுட்டிக்காட்டவும்

வியாழன், 16 ஜூன், 2011

வற்றாப்பளை அம்மன்.


இலங்கையின் வடக்கே வனமும் வனம் சார்ந்த தீவாம் முல்லைதீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிராமத்தில் அமைந்துள்ள பத்தாப்பளை என்னும் கிராமம் தற்போது மருகி வற்றாப்பளை என்று அழைக்கப்படுகின்றது. வற்றப்பளைக்கு மட்டுமல்ல முல்லைதீவிற்கே சிறப்பு தான் வற்றப்பளையம்மன்.







வற்றப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சபம் 13.06.2011 திங்கட்கிழமை பொ ங்கல் நடைபெற்றது. அவ் பொங்கலுக்கும் எமது குழு சென்றது. எங்கு பொங்கல் இடம்பெற்றாலும் நமது குழு அங்கே நிக்கும்.
சரி அலயத்திற்கான பயண மதியம் இருநண்பர்களோடு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு மாலை சாவகச்சேரியில் ஓருவருடன் மூன்றான நண்பர்களுடனான பயணம் இயக்கச்சி சந்தியில் நிறுத்தி எனது ஆருயிர் நண்பனான வதனுக்காக சந்தியில் காத்திருந்த பின்னர் மாலை 4.00 மணிக்கு எமது பயணம் போருந்து ஒன்றிலேறி பரந்தனுடாக பயணம் செய்தோம். யுத்த வடுக்கள் நிறைந்த வன்னிமண்ணை பர்த்து எமது மனம் கொதித்தது.

வழியோரமெல்லம் வாகங்கள் பல சேதமடைந்து விடுகள் மரங்கள் எல்லாம் சேதமைந்ததை பார்த்து ஒன்றை மட்டும் புரிந்தோம் இவைகளுக்கெல்லம் இப்படியென்றால் மனிதனுக்கு எப்படியிருந்திருக்கும்.


புதுக்குடியிருப்பு பாலத்தடியில் 1கிலே மிற்றரை கடப்பதற்கு மட்டும் 90நிமிடங்கள் எடுத்துது. அவ்வளவு வாகன நெருசல் .சரி ஆலயத்தை மாலை 8.00 சென்றடைந்தோம் பல லட்சம் சனங்கள் பல்வாயிரக்கணக்கான வாகனங்கள் என்று வற்றாப்பளை மண் நிரம்பி வழிந்தது



ஆலயத்திலிருந்து ஒரு கிலே மிற்றர் அளவு துரத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு நடையாக ஆலயத்தை சென்றடைந்தோம்

ஆலய அமைப்பு பற்றி பார்த்தால் ஆலயத்திற்கு முன்பக்கமாக நந்திக்கடலும் ஆலயத்தை சூழ வெளிகள் நிறைந்த இடைக்கிடை மரங்களுமன பிரதேசமாம் தான் வற்றப்பளை அம்மன் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தான். மக்கள் வந்து தமக்கென்று ஒரு இடத்தை வாங்கியது போல ஒரு இடத்தை தெரிவு செய்து பாய்கள் கொண்டுவந்து விரித்து தமது குடும்பத்துடன் நண்கர்களுடன் அமர்நது விடுவார்கள். அமர்ந்த பின் தான் மாறி மாறி கோயில் போய் வணங்குவார்கள். ஏனென்றால் கும்பிட சென்றால் ஆட்கள் மாறிவிடவார்கள் பிறகு குடும்பம் ஒன்று சேர்வது என்றால் கடினம் ஆதலால் தமக்கென்று இடத்தை தெரிவு செய்தவிடுவர்கள். நாங்களும் எமக்கென்று இடம் தெரிவுசெய்வதென்று இடையில் ஒருவர் மாறுவேமாகவிருந்தால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று நிற்கவேண்டும் என்றுதான் கொள்கை. இடம் தேடுவது என்பது கடினம் இது எங்கட டம் தம்பி என்றார் ஒருவர் நாங்களும் அவரை விடவில்லை உறுதியை தாருங்கள் விட்டு விலத்தகின்றோம் என்று ஒரு இடத்தை ஆக்கிரமித்தவிட்டோம். அவர் பின்னர் எம்முடன் இணக்கத்தக்கு வந்தவிட்டர் அவர்களை எமது பயணப்பைகளுக்கு பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நாம் கோயிலுக்கு கும்பிடுவதற்காக கோயிலுக்குள்ளே சென்றோம்.

ஆண்கள் மேலங்கியுடன் உள்ளே செல்லலாம் ஒருவாறு இடிபட்டு நெரிபட்டு அம்மனை தரிசித்தோம் ஆலயத்துக்குள் சென்றதும் எம்மையறியது ஒரு பக்தி எமக்குள்ளையே வரும் அவ்வளவுக்கு ஒரு புதுமையான கோவில் தான் வற்றாப்பளை அம்மன்.

ஆலயத்திற்கு விடிய விடிய காவடிகள் தூக்கு காவடிகள் வந்தவண்ணமிருந்தர்கள் அருமையான முறையில வாகனங்களில் வர்ண விளக்குகளால் சோடிக்கப்பட்டு தூக்கு காவடிகள் வந்தன.



வற்றப்பளை அம்மன்ஆலய வரலாற்றை அறிவதற்கானக இங்கும் ஒரு முதியவரை நாம் அணுகினோம் .
வற்றப்பளை அம்மன் கோவில் பெங்கலுக்கு எழு நாளைக்கு முன்னர் நந்திக்கடலுக்கு சென்று ஆலய பூசகர் ஒர குடத்துடன் நந்திக்கடலில் முழ்கி எழும்போது குடத்தினுன் வருகின்ற தண்ணீரை முள்ளியவளையில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு ஒரவார காலமாக விநாயகரலயத்தில் தீபமேற்றப்பட்டிருக:குமாம். அக்காலப்பகுதியில் முள்ளியவளையை சுற்றியுள்ள பத்து அயற்கிராமங்களுக்கு ஒருவர் சென்று பொங்கலுக்கான பொருட்களை வீடுவிடாக பெற்று பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பாராம். இவ நிகழவை பாக்கு தண்டுதல் என குறிப்பிவார்கள். பின்னர் வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கலன்று காலை ஆலயத்திற்கு தண்ணீரில் எரியும் தீபம் தண்டிய பொருட்கள் என்பவற்றை கொண்டவருவார்களாம். பின்னர் மாலை பெங்கல் உற்சபம் ஆரம்பமாகிவிடும் .
பல்லாயிரக்கணக்கான மக்கள் பானைவைத்து பொங்கி ஆலய உள்புறத்தில் அமைந்தள் பொங்கல் படைக்கு மண்டபத்தில் படைத்தவிட்டு வரும் மக்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்தபின்னர் பானையை அவிடத்தில் வைத்து விட்டு வெறும் கையுடன் தானட வீடு திரும்புவார்களால் அக்காலத்தில் ஆனால் இக்காலத்தில் படைத்தவிட்டு நேரடியாக தாங்கள் வந்த வண்டியில் கொண்டுசென்று எற்றிவிடுகின்றார்கள் என் கண்முன்னே நான் கண்டவை .

நள்ளிரவு ஆலயத்துக்குள் வழந்துவைக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். நள்ளிரவு பறை ஒலிக்க கோவிலின் தெற்கு புறத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து தண்டிய வழந்த பொருட்கள் வளந்த பானைகள் சகிதம் ஆலயத்தை வலமம் வந்து ஆலய முன்றலின் உட்பிரகாரத்தில் வழந்த பானை வைக்கப்பட்டு பொங்கள் நடைபெறும் .மூன்று பானைகளில் வளந்து வைத்து பொங்குவார்கள். இதற்கிடையில் அலயத்தில் தண்ணீரில் தீபம் எரிந்தவண்ணமிருக்கும்.

அதிகாலை ஒர மணிக்கு பின்னர் ஆலயத்திற்கு வந்தவார்கள் வீடு திரும்பிய வண்ணமிருப்பார்கள்

இவ்வாலயத்தக்கு லண்டனில் வாளும் ஒர் அன்பர் அவர்களால் ஒரு கோயில் மணியினை அன்பளிப்பு செய்யப்பட்டது.. மணியின் சிறப்பம்சம் என்னவென்றதல் யாழ்ப்பானம் தொல்லிப்பளை தூர்கையம்மன் ஆலய மணி செய்யப்பட்ட இடத்தில் ஒரே நேரத்தில் லண்டன் நகரில் வார்க்கப்பட்டது. இவ்வாலய மணியானது சரியாக ஒலிக்குமானால் 10கிலோ மிற்றர் தூரம் கோட்கும் என்பது நிறுவன உத்தரவாதம்



இங்கு சில கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைக்கவேண்டியிருக்கும். ஆலய ஒலிபொருக்கியில் இளைஞர்களை யுவதிகளும் யுவதிகளை இளைஞர்களை தேடும் அறிவத்தல் கோவிலுக்கு சென்றதிலிருந்து வீடு திரும்பும் வரை ஓலித்தவண்ணமிருந்தது . தொலை தொடர்பும் பொங்கலன்று செயலிழந்த காணப்பட்டது . என்றாலும் கலாசர சீரளிவுகளும் அங்காங்கே காணப்பட்டது . கேட்பதற்கு யாருமில்லை ஆதலால் போல .

நன்றி
நவநீதன்

(எதாவது எழுத்துபிழையிருப்பின் மன்னித்து. தவறுகளிருப்பின் அல்லது உங்களுக்கு தெரிந்த வரலாறு பற்றிய தகவல்களை எமக்கு பின்னுட்டலினுடாக அறியத்தாருங்கள்)



ஞாயிறு, 12 ஜூன், 2011

திரியாய் அம்மன்.










யாழ்ப்பாணத்திற்கு தெற்கே கிளிநெச்சி நகருக்கு வடக்கே பச்சிலைப்பள்ளி என்றழைக்கப்படும் பளை பிரதேசத்தில் முகாவில இயக்கச்சியில் ஆற்றங்கயோரமாக அமைந்திருக்கின்ற பழைமைவாய்ந்த புதுமைமிக்க அம்மன் தான் திரியாய் அம்மன். அம்மன் ஆலயத்தின் பொங்கல் சென்ற வெள்ளிக்கிழமை
(10.06.2011) வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெங்கலன்று நானும் எனது நிறுவனத்தின் வேலைகளுக்கு மதியம் 10.00 முழுக்கு போட்டுவிட்டு அம்மனை தரிசிப்பதற்காள எனது முதாததையரின் கிராமத்துக்கு சென்றேன். அதற்கிடையில் எனது நண்பரான வதன் அவர்களும் அவர்பணிபுரியும் அரச நிறுவனத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு பளை கிராமத்தில் வந்து இறங்கி நின்று என்னையும் வரைவேற்று அவருடைய செந்த ஊரான இயக்கசிக்கு சென்று தங்கி இரவு 8.00 மணியளவில் ஆலயத்தக்கு செல்வதற்காக எமது பயணத்தை தொடர்ந்தோம் கிராமத்தின் சிறப்புக்களை அன்று எங்களின் கண்களால் மட்டுமல்ல எமது மனங்களாலும் அறிந்து கொண்டோம். பனை,தென்னைம் தோப்புகள் மரவளங்கள் குளங்கள் ஆறுகள் என்பவற்றை கடந்து திரியாய் அம்மன் ஆலயத்திற்குள் நுளைந்தோம். அருமையான இயற்கை காற்றோட்டம். நகரத்தில் காசுகொடுத்தாலும் வாங்கமுடியாது. சரி ஆலயத்திற்கு வருவோம் யுத்தத்தால் எம் அம்மனும் பாதிக்கப்பட்டிருப்பதை பார்தோம் தற்போது கோயில் வேலைகள் நடைபெற்று வருகின்றது . அம்மன் பாலஸ்தானம் செய்யப்பட்டு சிறிய கொட்டகையிலே இருந்து மக்களுக்காக அருள்பாலித்தக்கொண்டிருந்தார். இரவிரவாக துக்குக்காவடிகன் ,ஆட்டக்காவடிகள் என விடியும்வரை ஆலயத்திற்கு வந்தவண்ணமிருந்தது.
மக்கள் தமது நேர்த்திக்கடன் களை நிறைவெற்றிக்கொண்டிருந்ததர்கள்.

இதற்கிடையிலே நாங்கள் ஒரு முதியவர் ஒருவரை தொடர்புகொண்டு அவரை அழைத்தவந்து அலய அருகிலே ஒரு மரநிழலிலே அவருடன் அமர்ந்து ஆலயத்தின் புதுமைகளை கோட்டோம் அவரும் இவ்வாலய வரலாறுகளை அடுக்கிய வண்ணமிருந்தார். அவருடன் கலங்துரையாடியவை பின்னர் தருகின்றேன் ஏன் என்றால் இன்றும் எனது வேலைக்கு முழுக்குபோடுவதற்கான அனுமதி வாங்கிவிட்டேன். வற்றாப்பளை அம்மன் ஆலயம் செல்வதற்காக தயாராக வேண்டும். திரிய் அம்மன் ஆலய காவடி பார்ப்பதற்கென்று பலர் வருவார்களாம் என்னென்றால் அப்படி அருமையான காவடியாட்டம் ஜயாவும் சொன்னார் தம்பி பொறடா மசார் பொடியள் காவடியோடு வருவாங்கள் ஆட்டத்தை பாரடா என்றார்.
அத்தோடு சல்லியடி பொடியளும் பின்னுக்கு வருவார்கள் என்றார் நள்ளிரவை கடந்தும் வரவில்லை அதிகாலை ஒருமணியளவில் ஜயா சொன்னர் தம்பி டேய் நட்டுவ மேள சத்தம் கோட்குதடா மாசர் பொடியங்களின் காவடி வருகுதடா பருங்கோ என்றார்.

பல இளம் இளைஞர்கள் கவடியெடுத்து வந்ததர்கள். நாங்களும் இவங்கள் என்ன வளமையாக எல்லாரும் ஆடுமாய் பேலவே அடுவாங்கள் என்று மனதுக்குள் நினைத்தவண்ணம் இருந்தோம். நித்திரையாக இருந்தமக்களெல்லம் எழுந்து காவடியை சுற்றி நின்றார்கள். ஆலய நிர்வாகமும் ஓலிபெருக்கியில் அறிவித்தார்கள் காவடிக்கு முன்னால் நிற்பவர்கள் அமர்ந்திருந்து மற்றவர்களையும் பார்கவைக்குமாறு வேண்டினார்கள்

உனடியாக நாமும் சென்று காவடியாட்டத்தை பார்த்து ரசித்தோம். மிக்க அருமை வார்தையாலையோ சொற்களாலையோ வர்ணிக்கமுடியாது. அடுத்து சல்லியடி காரர்களின் காவடி என்றார்கள் அதுவும் அருமையாகவிருந்தது. ஆலயத்தை பற்றைகளும் ஆறுமான இயற்கைக்கு இயற்கையே பார்த்து கண்ணுற்றுவிடும் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறான அழகான இடம்.

சரி இனி ஆலய நிர்வானத்தினர் ஒலிபெருக்கியில் விடிய விடிய கூவிய வண்ணமிருந்ததர்கள். அலய வளர்ச்சிக்கு பணமாகவே பொருளாகவே தருமாறு வேண்டி நிற்கின்றோம் என்றனர். ஆலயத்திற்கு பணம் செலுத்துவது என்பது எனக்கு பிடிக்காத காரியம் என்றாலும் எனது முததையரின் வேண்டுகோளிற்கினங்க குறித்த ஆலய உற்சபகால பணிமனையில் செலுத்துவதற்கு சென்றுறோம். அங்கு நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தோம் சிறு சச்சரவுக்கு மத்தியில் எமது சிறுதொகை பணத்தை வழங்க முன்வந்தோம் ஆலய த்தில் பணம் கொடுப்பவர்களின் பெயர் வாசிப்பது என்பது எமக்கு பிடிக்கவில்லை. பலர் பணத்தை கொடுத்துவிட்டு ஊரின் பெயர், தன்னுடைய பெயர் என்பவற்றை ஒலிபொருக்கியில் ஒலிப்பதற்காக கொடுத்தார்கள் எதே அதில் சென்னால் தான் கடவுளுக்கு விழங்குமோதெரியல்லை. எமது வேண்கோளும் இதுதான் எமக்கு பெயர் குறிப்பிடாத பற்றிசீட்டு தருமாறு வேண்டியோம் அவர்கள் எற்றுக்கொள்ளவில்லை மக்களே சிந்தியுங்கள் பெயரடிப்பதற்றல்ல பொங்கல் நடைபெற்றது. தொண்டுசெய்தோம் அவ்வளவும்தான். நல்ல காரியத்துக்கு பயன் பெறவேண்டும் . ஆலயம் வளர்ச்சியடைவதில பக்தி வெறுபடுவதில்லை. சிந்தியுங்கள் எமது வாழ்வாதரங்களை உயர்த்த நாம முன்வர வேண்டும். அலய சுழலில் அல்லது அயற்கிராமங்களில் ஒரு பாலர் பாடசாலையோ அல்லது எழைகளுக்கு உதவியோ செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பமும் கடவுளின் விருப்பமும் .

சரிய காலை எமது அலய பயணத்தை முடித்து விடு திரும்பும் போது ஆலயத்தின் ஒலிபொருக்கியில் அரசியல் பேசப்பட்டது. மக்ககே பக்திக்கும் மரியாதைக்கும் உரிய ஆலத்தை வீண்விரமாகாது கடவுளின் பளிக்கு ஆளாகிவடாதிர்கள்.

(இன்னும் சிறு வாரத்தில் ஆலய வரலாறு பற்றிய தகவல் நாம் இணைக்கப்படும்)

நன்றி
நவநீதன்

புதன், 11 மே, 2011

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.


இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம்.


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.


மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும்.


1) சிதம்பரம் - கனகசபை
2) திருவாலங்காடு - இரத்தினசபை
3) மதுரை - வெள்ளிசபை
4) திருநெல்வேலி - தாமிரசபை
5) திருக்குற்றாலம் - சித்திரசபை.


இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.


சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.


கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.


ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.


தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.


நிருத்தசபை - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.


இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.


கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.


மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.


மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு. 500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.


எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.


திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.


தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.


1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்


2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,


3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்


4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,


5)ஐந்தாம் பூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.


6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.



கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.


எப்படி செல்வது?
1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.


2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் சில ரயில்கள் 6701, 6702, 2794, 6175, 6854, 6853.


3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 195 கி.மீ தொலைவில்.

மகாபலிபுரம் பாகம்

வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா?


நிச்சயமாக. அதுதான் எனது வேலையே. வாங்க போகலாம்.
நீங்க எங்கிருந்து வர்றீங்க?


மதுரைலேந்து. பசங்களுக்கெல்லாம் லீவு விட்டதால ஊரைச் சுத்தலாமுன்னு கெளம்பிட்டோம்.


சரி மாமல்லபுரத்தைப் பற்றி தெரிஞ்சுக்குவோம். காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற மாமல்லபுரத்துக்கு மகாபலிபுரமுன்னு இன்னொரு பேரும் இருக்கு. மாமல்லபுரம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டோட முக்கியமான துறைமுகமாக இருந்தது. இந்த இடத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லாவின் பெயரைக்கொண்டு பெயர் வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப் படுகிறது. இந்த இடத்துல இருக்கிற பல சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது.


இந்த இடத்துக்கு வேற என்ன சிறப்பெல்லாம் இருக்கு?


இந்த இடத்தை ஐ.நா சபையோட UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிச்சிருக்கு. மேலும் இந்த இடம் தமிழகத்தோட மிக பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும் சிற்பக்கலையையும் பாரம்பரியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வர்ராங்க.


மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.


மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில், குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக் குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க போகலாம் வாங்க.


இவைதான் ஐந்து ரதம். இயற்கையான பாறையை செதுக்கி ஒரே கல்லால் ஆன கோவில்கள் தேர் போல இருப்பதால் இதற்கு ரதம் எனும் பேர் வைக்கப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மன்தான் இதை உருவாக்கியவர். இந்த ஐந்து கற்கோவில்களும் பஞ்சபாண்டவ இரதங்கள் என்றும் சொல்லலாம்.


எல்லாமே ஒற்றைக் கற்களால் ஆனவையா?


இதில் நான்கு ரதங்கள் ஒரே கல்லால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று மட்டும் சில கற்களால் இணைத்து செய்யப்பட்டதுள்ளது.


அடுத்து எங்கு செல்லப் போகிறோம்?


வாங்க அர்ச்சுணன் தபசு பற்றி தெரிந்துகொள்ளலாம். பெரிய பாறையில் பல சிற்பங்களை செதுக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த அருச்சுணன் தபசு. முப்பது மீட்டர் உயரமும், அறுபது மீட்டர் நீளமும் இருக்கிறது.


நல்லா பாத்தீங்கனா இதுல நாலு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்குது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.


இதற்கு எப்படி அர்ச்சுணன் தபசுன்னு பேர் வைத்தார்கள்?


இதில் உள்ள ஒரு சிற்பம் ஒரு மனிதன் தவம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அர்ச்சுணன் பாசுபத அஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்ததால் இதனால் இதற்கு அருச்சுணன் தபசு என அழைக்கிறோம். சில பேர் பகீரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது போல் தோன்றுவதால் இதனை பகீரதன் தபசுன்னு குறிக்கிறார்கள்.


வாங்க! நல்லா சாப்டீங்களா?


சாப்பிட்டாச்சு! இப்ப என்ன பார்க்கப் போறோம்!


கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!


இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன காளை மாடுகள் கோயிலுக்கு அரண் போல இருக்கு.


சரி! இந்தக் கோயிலை யார் கட்டியது?

ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்மன் என்ற மன்னன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார்.


மேல சொல்லுங்க!



இந்தக் கோயிலின் விமானம் மட்டும் 60 அடி உயரம் இருக்குது.


கிரேன் போன்ற இயந்திரங்களின் உதவியே இல்லாத காலத்தில எப்படிதான் கல்ல அவ்வளவு உயரத்துல தூக்கி வச்சாங்களோ!!!


ஆமா! அது பெரிய ஆச்சரியம்தான். கற்களை சாரம் கட்டி தூக்கி வச்சதா சொல்றாங்க. இந்தக் கோவில்ல சிவனும் விஷ்ணுவும் நமக்கு காட்சிதர்ராங்க. சுவர் முழுவதும் நந்தி உருவத்தை செதுக்கி இருக்காங்க. இந்தக் கோவிலோட சிறப்பே இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான். சாமி கும்பிட்டது போதும்! வாங்க அடுத்த இடத்துக்கு போலாம்..


சரி, சரி அடுத்து எங்க?


வராக குகைக் கோயிலுக்கு போலாம். குகை போன்று இருப்பதால இதுக்கு குகைகோயில்னு பேர் வச்சிருக்காங்க. இந்தக் கோவிலின் உள்ளே விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.


மகாபலிபுரத்தில் ஒரே ஒரு குகைக்கோவில்தான் இருக்கா?


மொத்தம் 13 குகைக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோவில் காலத்தால் சிறப்பு வாய்ந்தது. கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் போன்ற பல குகைக் கோயில்கள் இருக்குது.


வாங்க மஹிசாசுர மர்த்தினி குகைக்கோயிலுக்கு போகலாம்.


இந்தக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கு. பாத்துட்டீங்களா?


நடந்து நடந்து கால் வலிக்குதுப்பா! சரி அடுத்த இடத்துக்கு போலாம்.


உங்களுக்கு வெண்ணெய்னா பிடிக்குமா?


ஏதோ கொஞ்சம் சாப்பிடுவேன்.


இதோ பாருங்க இதுதான் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை. தள்ளுனா உருண்டுடும்னு பயப்படாதீங்க. உங்களால ஒரு துளி கூட தள்ளமுடியாது. இந்தப் கல் பாறை எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. இந்த வெண்ணெயையும் கொஞ்சம் சாப்பிடுங்க.


இருங்க சார்! உருண்டையை தள்ளுற மாதிரி போட்டோ எடுத்துக்குறேன்.


எடுத்தாச்சா? வாங்க புலிக்குகைக்கு போலாம்.



புலிக்குகையா! புலினா எனக்கு பயம். நா வல்லப்பா. ஆள விடுங்க..


புலியெல்லாம் இருக்காது.. பேருதான் புலிக்குகை.



அப்படியா? அப்படின்னா போலாம். வாங்க.


இந்தக் குகை பல்லவர் கால கலாச்சார நிகழ்வுகள் நடப்பதற்காக் திறந்தவெளி அரங்கமா உருவாக்கியிருக்காங்க. பல பழைமையான சிற்பங்களும் இங்கு இருக்கு. போய் பாத்துட்டு வாங்க.


சரி, மகாபலிபுரத்தோட பிரபலமான சுற்றுலாத் தளங்களையெல்லாம் சுத்திக் காண்பிச்சாச்சு. மகாபலிபுரம் எப்படி இருக்கு.


அருமையா இருக்கு, கற்களில் கலை நயத்தை கண்டது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எப்படியோ ஒரு வழியா பல்லவர்களோட சிற்பக்கலையையும், ரசனையையும் அறிஞ்சுக்கிட்டேன்.சுத்திக் காமிச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு எவ்ளோ பணம் குடுக்கணும்.


பணம் எல்லாம் வேண்டாம். என் நண்பன் தமிழக சுற்றுலான்னு வலைப்பதிவு எழுதுறான்,
முடிஞ்சா வலைப்பதிவை போய் பாருங்க. பிடிச்சுருந்தா அதுல பின்னூட்டம் போடுங்க.. அதுவே போதும்.


ரொம்ப நன்றி தம்பி. போயிட்டுவர்ரேன்.


என்ன மாமல்லபுரத்தைப் பற்றி தெரிந்துகொண்டீர்களா. அவர் சொன்னது போல மறக்காமல் பின்னூட்டம் போடுங்க..


குறிப்பு : இந்த இடங்கள் அனைத்தும் மாமல்லபுரத்தில் உள்ளது. ஒவ்வொரு இடமும் மற்ற இடங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.


எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
1)மகாபலிபுரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு 29 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை 58 கி.மீ தொலைவில்